ப் விமல் ஆறுமுகம், சென்னை.

எனது மகள் ரூபியின் படிப்பு, வேலை, திருமணம் பற்றிக் கூறவும்.

வி.ஏ. ரூபி 5-4-2003-ல் பிறந்தவர். விருச்சிக லக்னம், ரிஷப ராசி. கிருத்திகை நட்சத்திரம். இந்த ஜாதகத்தில் சந்திரன், குரு உச்சம். அம்சத்தில் சுக்கிரன் உச்சம். 5-ஆம் அதிபதி குரு 9-ல்; 9-ஆம் அதிபதி சந்திரன் 7#ல் உச்சம் பெறுகின்றனர். 10-ஆம் அதிபதி சூரியன் 5#ல் குரு பார்வையுடன் உள்ளார். இந்தப் பெண் ஐ.ஏ.எஸ் போன்ற உயர்கல்வி கற்று, பெரிய அரசுப் பதவி வகிப்பார். அதில் சந்தேகமேயில்லை. இந்தப் பெண்ணின் திருமணம் மட்டும் சற்று இடர்ப்பாடாக இருக்கும். 7#ல் சனி, சந்திரன், ராகு உள்ளனர். இவரது திருமணம் நல்ல நிலையில், குறைந்த இடையூறுகளுடன் நடந்து மணவாழ்வு நீடிக்க, திருவக்கரை கோவி-லுள்ள சந்திர மௌலீஸ்வரருக்கு நெய்தீபமேற்றவும். கன்றுடன்கூடிய பசுவுக்கு, நெல் அல்லது அரிசியை ஊறவைத்து வெல்லத்துடன் கொடுக்கவும். தாம்பூலத்துடன்கூடிய தாலிதானம் அவசியம்.

Advertisment

Q&A

ப் துரை, திண்டுக்கல்.

என் மகள்- மருமகன் ஜாதகம் அனுப்பியுள்ளேன். தொழில் சற்று மந்தமாக உள்ளது. உடல்நலமும் அடிக்கடி பாதிக்கிறது. தொழில், வங்கிக் கணக்கு, வீடு எல்லாம் மகள் பெயரில் உள்ளது. அதை மருமகன் பெயருக்கு மாற்றலாமா?

மருமகன் பி. ரமேஷ் பாபு 3-2-1976-ல் பிறந்தவர். கன்னி லக்னம், கும்ப ராசி, பூரட்டாதி நட்சத்திரம். நடப்பு கேது தசை சனி புக்தி. மகள் ஆர். விஜயஸ்ரீ 11-12-1978-ல் பிறந்தவர். மீன லக்னம், மேஷ ராசி, பரணி நட்சத்திரம். நடப்பு ராகு தசை, புதன் புக்தி. (நீங்கள் ராகு தசை, சனி புக்தி என்று எழுதியுள்ளீர்கள்). மருமகனுக்கு கேது 8#ல் இருந்தும், மகளுக்கு ராகு 6#ல் இருந்தும் தசை நடத்துகின்றனர். எனினும் அவர்களின் சாரநாதர் அமைப்புப்படி உடல் நலக் குறைவும், தொழில்வளக் குறைபாடும் உள்ளது. மருமகன் அடுத்து வரும் கேது தசை புதன் புக்தியில் 2022, செப்டம்பர் மாதத்திற்குமேல் பூர்வீக சொத்தை விற்றுக் கடனை அடைத்துவிடுவார். அடுத்துவரும் சுக்கிர தசை சுமாரான பலன் களைத் தரும். ஏனெனில் சுக்கிரன் அம்சத்தில் நீசம். கவனமாக இருந்தால் தொழிலை நன்கு நடத்தலாம். இப்போது உள்ளபடியே, தொழில் உங்கள் மகள் பெயரிலேயே இருக்கட்டும். பெயர் மாறுதல் வேண்டாம். கணவனுக்கு கேது தசையும், மனைவிக்கு ராகு தசையும் நடக்கும்போது, சற்று இடர்ப்பாடுகள் வரத்தான் செய்யும். ராகு# கேதுவுக்கு துர்க்கையை வணங்கவும். பௌர்ணமிதோறும் விரதமிருந்து அம்பாளை வணங்குதல் நன்று. இவ்வாறு ஒரே குடும்பத்தில் ராகு# கேது தசை நடப்பவர்கள் மயிலாடுதுறை# திருப்பாம்புரம் சென்று வணங்கவும். (திருவாரூர் சாலையில் உள்ளது).

ப் கந்தசாமி, செங்குந்தபுரம், கரூர்.

எனக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக வயிற்றுவலி உள்ளது. எல்லா மருத்துவமும் பார்த்துவிட்டேன்; குணமாகவில்லை. எப்போது நோய் தீரும்.

10-12-1950-ல் பிறந்தவர். சிம்ம லக்னம், தனுசு ராசி, பூராட நட்சத்திரம். நடப்பு குரு தசை. உங்களின் குரு பகவான் ராகு மற்றும் செவ்வாய்க் கிடையே அகப்பட்டு தவியாய்த் தவிக்கிறார். குரு 5-ஆம் அதிபதி. 5-ஆம் வீடு வயிற்றைக் குறிக்கும். அதனால் வயிற்றில் வலி ஏற்படுகிறது. இது அஜீரணம், வயிற்றுப் பூச்சிகளால் உண்டாகியிருக்கும். நீங்கள் கேரள ஆயுர்வேத சிகிச்சையைப் பின்பற்றவும். நடப்பு குரு தசையில் சந்திர புக்தி 2022, அக்டோபர் மாதம் ஆரம்பிக்கும். அதுமுதல் வயிற்றுவலியிலிருந்து மீண்டுவிடுவீர்கள். சனி 8#ஆம் வீட்டைப் பார்ப்பதால், நிறை ஆயுள் உண்டு. தீராத வயிற்றுவலி உள்ளவர்கள் சீர்காழி அருகிலுள்ள திருமுல்லைவாயில் தலம் சென்று வணங்கவும். முடிந்த மட்டும் அன்னதானம் செய்யவும்.

ப் முருகன், கடலூர்.

என் மகனுக்குத் திருமணம் எப்போது நடைபெறும்? அரசு மருத்துவர் பணி கிடைக்குமா?

மகன் செல்வகணேஷ் 14-11-1995-ல் பிறந்தவர். விருச்சிக லக்னம், கடக ராசி, பூச நட்சத்திரம். இவரது ஜாதகத்தில் லக்னத் தில் குரு, புதன், சுக்கிரன், செவ்வாய் சேர்க்கை. மேலும் செவ்வாய், சனி பார்வை; 5, 7-ஆம் அதிபதிகள் சேர்க்கை. சனி, 7-ஆம் அதிபதியைப் பார்ப்பதால், தாமதம் மற்றும் காதல் திருமணம் நடக்கும். தன்னுடன் வேலை செய்பவரைத் திருமணம் செய்துகொள்வார். அடுத்து வரும் சுக்கிர தசையில் திருமணம் நடக்கும். சூரியன் நீசம். எனவே அரசு வேலைக்கு வாய்ப்பில்லை. இந்த ஜாதகத்தில் பிரம்மஹத்தி தோஷம், கிரகயுத்த தோஷம், கிரகண தோஷம் என நிறைய தோஷங்கள் உள்ளன. ஒருமுறை திருச்சி# திருப்பட்டூர் சென்று பிரம்மாவின்முன் ஜாதகத்தை வைத்து வணங்கவும். திருமணத்திற்குமுன் குலதெய்வ விசேஷ வழிபாடும், தாலி தானமும் அவசியம்.

ப் ச. செந்தில்குமார், உளுந்தூர்பேட்டை.

என் மகள் திருமணம் எப்போது நடைபெறும். மருத்துவப் பணி சார்ந்த வரன் அமையுமா?

மகள் செ. சௌமியா 22-2-1997-ல் பிறந்த வர். ரிஷப லக்னம், சிம்ம ராசி, மக நட்சத்திரம். சனி, செவ்வாய் பார்வை யுள்ளது. மேலும் 7#ஆம் அதிபதி செவ்வாய் ராகுவுடன் உள்ளார். சனி பார்வை 7-ஆம் அதிபதிக்கு விழுகிறது. அதனால் தாமதம் மற்றும் கலப்பு மணமே வாய்க்கும். நடப்பு சூரிய தசை புதன் புக்தி 2023, நவம்பர் முதல் 2024, செப்டம்பருக்குள் நடக்கும் வாய்ப்புள்ளது. இல்லையெனில் சந்திர தசை ஆரம்பத்தில்தான் நடக்கும். உடன் வேலைசெய்யும் மருத்துவரை, உங்களின் ஆசிர்வாத அனுமதியோடு திருமணம் முடிப்பார். பெண்கள் ஜாதகத்தில் செவ்வாய், ராகு சேர்க்கை உள்ளவர்கள் சேலம் சுகவனேஸ் வரர் ஆலயம் சென்று வணங்கவும். இங்குள்ள நவகிரகத்தில் செவ்வாயும் ராகுவும் இடம் மாறியுள்ளனர். இங்கு வணங்குவது நன்று.

ப் கே. அய்யப்பன் பிள்ளை, நாகர்கோவில்.

என் மகளுக்கு 46 வயதாகிறது. திரும ணமே வேண்டாம் என்றிருந்து, பின்னர் மனநலம் பாதிக்கப்பட்டு திருமணமே செய்ய இயலாமல் போய்விட்டது. தற்போது இரவில் தூங்காமல், நள்ளிரவில் ஏதேதோ புலம்புகிறாள். இதற்கு என்ன காரணம்?

ஏ.எஸ். ஷீலா 25-8-1975-ல் பிறந்தவர். மேஷ லக்னம், மீன ராசி, ரேவதி நட்சத்திரம். லக்னத்துக்கு 2#ல் கேது; 8#ல் ராகு. இவர் திருமணமே வேண்டாம் என்று கூறி தற்போது சற்று உடல்நிலை சரியில்லாமல் உள்ளார். இந்த ஜாதகத்தில் 5-ஆம் அதிபதி சூரியனும், 7-ஆம் அதிபதி சுக்கிரனும் சேர்க்கை. இவரது இஷ்டப்படி திருமணம் நடக்க இருந்து, அது முறிந்திருக்கக்கூடும். அதன்பிறகு இவர் திருமணமே வேண்டாம் என்றிருந்திருக்கி றார். மேலும் இவரது ஜாதகத்தில் 5#ஆம் அதிபதி சூரியனை, செவ்வாய், கேதுவுடன், ராகு பார்வையில் தொடர்புகொள்கிறார். இதனால் இவரது குடும்பத்திற்குப் பிரேத சாபம் என்னும் சாபம் உள்ளது. மேலும் பாதகாதிபதி சனி, 6-ஆம் அதிபதி புதனைப் பார்வையிடுகிறார். எனவே வேண்டாத செயல் செய்யப்பட்டுள்ளது. நடப்பு சந்திர தசை# லக்னத்துக்கு 12-ல் புதன் சாரம் பெற்று நடத்து கிறார். புதன் 6-ஆமிடத்தில் உச்சம். நோய்த் தாக்கம் அதிகரிக்கும். இவர் குடும்பத்தினர் அருகிலுள்ள கோவிலில் தினமும் தீபமேற்றவும். வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை. மற்றவை இறைவனின் விருப்பம்.

செல்: 94449 61845